Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Now showing in srilanka

kalakalappu - Tamil

Cinecity DTS (A/C) - Maradana :10.30AM | 2.30PM | 6.30PM | 9.30PM
Cineworld DTS (A/C) - Colombo : 10:30 AM | 02:30 PM | 06:30 PM

urumi - Tamil

Concord - Dehiwala DTS : 10:30 AM | 02:30 PM | 06:30 PM
Cinecity DTS (A/C) - Maradana :10.30AM | 2.30PM | 6.30PM | 9.30PM
Raja DTS -Jaffna : 10:30 AM | 02:30 PM | 06:30 PM | 9.30PM

Manam koththi paravai - Tamil

Ruby DTS (A/C) - maligawatthe : 10:30 AM | 02:30 PM | 06:30 PM
Chella - Jaffna - 10:30 AM | 02:30 PM | 06:30 PM

ishtam - tamil

Cinecity DTS (A/C) - Maradana :10.30AM | 2.30PM | 6.30PM | 9.30PM

thadayara thaakka - tamil

Eros - Pamankada :10:30 AM | 02:30 PM | 06:30 PM | 09.30PM (Fri, Sat, Sun )
Cinecity DTS (A/C) - Maradana :10.30AM | 2.30PM | 6.30PM | 9.30PM

Dhasavatharam - tamil

Cineworld DTS (A/C) - Colombo : 10:30 AM | 02:30 PM | 06:30 PM

Avengers - English

Savoy 2 (A/C) - Wellawatte : 10.30AM | 1.30PM | 4.15PM | 7.00PM

Showing posts with label என்தமிழ் பக்கம். Show all posts
Showing posts with label என்தமிழ் பக்கம். Show all posts

Saturday, July 7, 2012

சகுனி விமர்சனம் (Saguni Review)

பில்லா இல்லாத சந்தோசத்தில் கிட்டத்தட்ட 1000க்கு மேற்பட்ட தியேட்டர்களில் களமிறங்கியிருக்கிறது சகுனி.சிம்பிள் கதை. நம்பக்கூடிய லாஜிக்.


காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!


முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை. 


தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
இதுவரை விடலை பையனாக நடித்து வந்த கார்த்தியின் முகத்தில் ஒரு மெச்சூரிட்டி தெரிகிறது. அந்த மெச்சூரிட்டி தான் எந்த வித அரசியல் சாணக்கியமாக முடிவெடுக்கும் போதும் நம்பக்கூடியதாக இருக்கிறது.
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதமும் அதை சந்தானம் தனது பாணியில் கலாய்ப்பதும் இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு ரசிக்ககூடிய விடயம்.கார்த்தி, சந்தானம் நல்ல combination.

இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!


ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. Editor கொஞ்சம் சறுக்கி விட்டார் என்றே சொல்லவேணும். படம் கொஞ்சம் நீளம் என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது,Commercial படம் வேறு.


G.V.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் ஓகே. அதுவும் 2 பாடல்கள் Double OK. மனசெல்லாம் பாடலுக்கு இசையமைத்த G.Vக்கும் படமாக்கிய முத்தையாவுக்கும் Special Clap. 


சின்ன சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் படம் ஓகே. குடும்பத்துடன் பார்க்கலாம்.


இப்படிக்கு,
சிற்பி



Friday, January 20, 2012

The Dirty Picture (டர்டி பிக்சர்) விமர்சனம்

ஒரு சாதாரண மேக்கப் பொண்ணு எப்படி நடிகை ஆகி வருவதென்பதை நாகரீகமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த "dirty picture ".80 களின் தமிழ் திரையுலகை களமாக  கொண்டு சில்கின் வாழ்க்கை தழுவல்தான் டர்டி பிக்சர். ஆனால் முழுக்க முழுக்க உணமைக் கதையாய் இல்லாமல் சினிமாவுக்கேற்ற கற்பனைகளை கலந்திருப்பது விசேஷம். ஆரம்ப டைட்டிலிலேயே "நாக்க முக்க " என்ற பாட்டின் மூலம் தமிழ் படமாக மாற்றி, தமிழுக்கும் இந்தப் படத்திற்கும் உள்ள உறவினை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள் . இவ்வளவு Easyஆக இந்த கதாபத்திரத்தை எடுத்து நடித்திருக்கும் வித்யா பாலனின் நடிப்பும் சூப்பர், துணிச்சலும் சூப்பர். நசிருதீன் ஷா வயதான வக்ரமான ஹீரோ பாத்திரத்தை அவ்வளவு நுணுக்கமாக செய்திருக்கிறார். பெயர் சூர்யகாந்த் என வைத்து ரஜினியை கிண்டல் செய்கிறார்களோ என நினைக்க வைத்தாலும், நசிருதீன் கதாபாத்திரம் அந்தக் கால திலக நடிகரின் சாயல்தான் என அப்போதைய கிசுகிசுக்கள் அறிந்தவர்களுக்கு தெரியும்.  கிட்டத்தட்ட சில்க் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் வித்யா பாலன்,  வல்கரான டயலாக் ஆகட்டும், கிளுகிளுப்பான உடலசைவாகட்டும், எந்த Inhibitionம் இல்லாமல் அவ்வளவு அருமையாகநடித்திருக்கிறார்.



"ஐநூறு பொண்ணுங்க கிட்ட நீங்க நினைச்சா போகலாம். ஆனா ஒரே பொண்ணு கிட்ட நீங்க ஐநூறு வாட்டி போயிருக்கீங்களா ?"  என்ற Dialogகளும் படத்தின் Hitக்கு ஒரு காரணம் தான்.  .நசிரூதீன் ஷாவின் பயந்த தம்பியாக, கதாசிரியராக வரும் துஷார் மற்றவர்களின் நடிப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார். 



இமரான் வித்யாவின் கதை, அதாவது மோதலில் ஆரம்பித்து குடியில் முடியும் அவர்கள் உறவு வெள்ளித்திரையில் இதுவரை சொல்லப்படாததுOverall First halfல் விறுவிறுப்பாக போகும் படம் Second Halfல் தொய்வு பெறுகிறது. இருந்தாலும், கடைசி காட்சிகள் பரவாயில்லை. ஒரு சென்சிடிவான சப்ஜக்டை மிக அழகாக எல்லை தாண்டாமல் இயக்கியிருக்கிறார் மிலன் . ஆனால் சினிமாவின் வீக்னெஸ்ஸை சொல்லிக் கொண்டே  Second Halfல்   இவரும் சில  Compromise செய்தது கொஞ்சம் கேவலம். "சினிமாவுக்கு முக்கியம் மூன்று Entertainment , Entertainment, Entertainment" என்ற வரிகளின் மூலம் 1980களின் சினிமாவை பற்றி சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ். அத்தகைய கால கட்டத்தில் ஒரு புரட்சியை உண்டு பண்ண துடிக்கும் ஒரு இளம் இயக்குனரின் கதாபாத்திரம் இம்ரானுக்கு."ஒரு வேளை Shakespeare ஓட tragedy எனக்கு நடக்குதோ  எண்ணு தோணுது உன்னோட சண்ட போட்ட நான் உனக்காக சண்ட போட ஆரம்பிச்சுட்டன் ? " என்று Shakespeare இன் வாழ்கையை ஒரேயொரு வசனத்தில் சொன்னது பிரமாதம். எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவரை விமர்சிக்கிறோமோ  அவ்வளவுக்கு அவர் வளர்ந்து போவார் என்ற உண்மையை சொல்லியிருக்கிறார்கள் .அதற்கு உதாரணம் இந்த காலத்தில் தங்களுக்கு தாங்களே கிசு கிசு பரப்பும் நடிகைகள் தான். கதையில் "ஷகிலா" என்ற பெயரில் வரும் கதாபாத்திரம் அந்த கால Disco shanthiயை ஞாபகபடுத்துகிறார். மொத்தத்தில் இந்த படம், க்ளாமர் மட்டும் நம்பி சினிமாவுக்குள் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்குள் வரும் நடிகைகளுக்கு சாட்டையடி. dirty picture நல்ல முயற்சி. 

இப்படிக்கு,
சிற்பி  


Monday, January 16, 2012

நண்பன் | திரை விமர்சனம்

ஹிந்தியில் சக்கை போடு  போட்ட "3idiots " படத்தினுடைய remake தான் இந்த நண்பன். அடிக்கடி அரசியல் வசனங்களை தனது படங்களில் பேசி தனது அரசியல் பிரவேசத்தை சொல்லாமல் சொல்லும் நடிகர் விஜய், 'மச்சி, ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்கிற ஜீவா , வாய்ப்பே இல்லாமல் இருந்த ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரை பற்றிய கதையே ஷங்கரின் நண்பன். நண்பன் விஜய்யை தேடி கல்லூரி பழைய நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் மூவரும் போகிறார்கள். கூடவே விஜய்யின் காதலி இலியானாவும் ஒட்டிக் கொள்கிறார். அவரது முகவரியில் போய் பார்த்தால் அங்கு விஜய் பெயரில் இருப்பது எஸ்.ஜே.சூர்யா. இவருக்காக அவர் பரீட்சை எழுதியிருக்கிறார் என்பதும், பணக்கார சூர்யாவுடைய வேலைக்காரர் மகன்தான் விஜய் என்பதும் தெரியவர, விஜய்யை தேடுகிறது நண்பன் வட்டாரம். அவர் என்னவானார் என்பதுதான் முடிவு.

 punch dialog , பறந்து பறந்து அடிக்கும் சண்டை கட்சிகள் நிறைந்த விஜயின் சாதாரண படங்களை போல் இல்லாமல் புதுமுக ஹீரோக்கள் மாதிரி சாதாரணமாக வரும் விஜய் எந்த இடத்திலும் நம்மை அலுக்க விடவில்லை. என்னை பொறுத்த வரை சச்சின், காவலன் வரிசையில் நண்பனையும் சேர்க்கலாம் போல தோணுது.விஜய் தான் இப்படி என்று பார்த்தா அவருக்கு சரி நிகராக, தனக்கே உரிய இயல்பான பாணியில் ஜீவாவும், வாய்ப்பில்லாமல் இருந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கும் ஸ்ரீகாந்தும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள் . 2 நிமிட காட்சி என்றாலும் S.J.Surya தனது வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.



 ஹிந்தியில்  Omi Vaidya வின் பாத்திரத்தில் தமிழில் தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் சதயனது நடிப்பு பாராட்ட வேண்டியது.முரட்டு வாத்தியாராக வருகிற சத்யராஜ் மாணவர்களை படுத்துகிற சம்பவங்களும், போடுகிற தில்லாலங்கடி ரூட்டுகளும் அதிர்ச்சி ரகம். Boman Irani "3 idiots" இல் நடித்ததை போன்று நடித்திருக்கும் சத்யராஜ் சில இடங்களில் தனது இயல்பான பணியை புகுத்தியிருக்கிறார். விஜயின் நடனத்தை எதிர்பார்த்து போனவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். 


"இருக்கனா" படலை புகுத்த வேண்டிய இடத்தில் புகுத்தி இருக்கும் ஷங்கருக்கு ஒரு சபாஷ். பாடல்களை படமாக்குவதில் கில்லாடியான ஷங்கர் "asku laska" பாடலுக்கு சிரமம் எடுத்தது போன்று "இருக்கனா" பாடலுக்கும் கொஞ்சம் சிரமம் எடுத்திருக்கலாம்.  "asku laska"  பாடல் மூலம் தான் ஒரு Melody king என்று ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் நிருபித்து இருந்தாலும், பின்னணி இசையில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேணும். "ஏ.ஆர்.ரகுமானோட அப்பா அவரை கிரிக்கெட் கத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தி,...டென்டுல்கரோட அப்பா அவரை மியூசிக் டைரக்டரா ஆகச்சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தா என்ன ஆகியிருக்கும்...?" என்ற வைர வசனங்களோடு, "asku laska" பாடலில் 16 மொழிகளில் காதல் என்ற சொல்லின் அர்த்தங்களை சொல்லிய  மதன் கார்க்கியை பாராட்டவேண்டும். remake மன்னர்கள் என்ற வரிசையில்  விஷ்ணு வர்தன் , ராஜா  போன்றோருக்கு அடுத்தபடியாக  நண்பன் படம் மூலம் புதிதாக ஷங்கரும் சேர்ந்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும் இம்மாதிரியான ரீமேக் படங்களை எடுக்கும் போது ஷங்கரின் கற்பனாசக்தி அதாவது Creativity கொஞ்சம் குறைகிறதோ எண்டொரு Feeling. எதோ வந்தோம் பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம் என்று மற்றைய heroine மாதிரி இல்லாமல் நடிப்புக்கு சற்று முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் படத்தின் கதாநாயகி இல்லியானா.  மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ஆன்டனி(Anthony) யின் Editing உம் தியேட்டரில் படத்தை மெய்மறந்து பார்க்க வைக்கின்றன. இருந்தாலும் remake படம் என்பதால் Editor ஆன்டனிக்கு பாடல்களை தவிர மற்றைய இடங்களில் கொஞ்சம் வேலை இல்லாமல் போய்விட்டது எனலாம்.
மொத்தத்தில் நண்பன் all is double well .

இப்படிக்கு,
சிற்பி 




-Panel Sytpi - 

Tuesday, November 29, 2011

அழிந்து வரும் சிட்டுக்குருவி

அண்மையில் சன் டிவியில் "வாங்க பேசலாம்" என்ற ஒரு நிகழ்ச்சி  பார்த்தேன் . தினமும் ஏதாவது ஒரு தலைப்பில் பேசிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி அது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் இப்படி உட்கார்ந்து கதைப்பது என்பது மிக மிக அரிது. அப்படி பட்ட சந்தர்பங்களில் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன.அன்றைய தினம் முற்றிலும் பறவைகளை பற்றியது . அதிலும் சிறப்பாக என்னை கவர்ந்தது சிட்டு குருவி பற்றியது. ஒரு காலத்தில் எங்களது வீட்டுக்கு அழையா விருந்தாளியாக எங்கள் வீட்டு முகப்புகளிலும், திண்ணைகளிலும் , வீட்டு தாழ்வாரத்திலும் கூடு கட்டி வாழும் இந்த பறவைகள் இப்போ இருந்த சான்றே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அருகிவிட்டது இந்த இனம். அதுவும் அதன் அழிவு வீதம் கடந்த 5 ஆண்டுகள் மிகவும் அதிகம் என்றே புள்ளி விபரங்கள் கூறுகின்றன.  மிகவும் எளிமான இந்த பறவை  பருமனில் மிக சிறியது.


இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு ஒரு 10 வயது இருந்த காலப்பகுதிகளில் வீட்டில் ஒரு card board பெட்டியில் கொஞ்சம் தும்புகளை போட்டு மேலே தொங்க விடுவது வழக்கம். அது சிட்டு குருவிகள் வந்து தங்குவதற்காகும். புதுசா ஒரு வீடு வாடகைக்கு மாறி செல்லும் போது பொய் கொஞ்ச நாள் வீடு வெறிச்சோடி போய் இருக்கும். ஒரு சில நாட்களின் பிறகு அழையா விருந்தாளியாக வரும் இந்த பறவைக்காக  ஒரு card board பெட்டி மேலே தாழ்வாரத்தில் ஏறிவிடும். அனால் காலப்போக்கில் நாகரீக மாற்றத்தாலும் நேர மிச்சமின்மயாலும் இந்த வழக்கமும் ஏன் இந்த பறவையை பற்றியே மறந்து போய்விட்டது. 


மிக வேகமாக அழிந்து வரும் இனங்களில் இதுவும் ஒன்றாகும். அதிகரித்துவரும் தொலைபேசி பாவனை இதற்கு ஒரு காரணம் என்று ஒரு கண்டுபிடிப்பு இருந்தது. தமிழர்களுக்கு காப்பாத்த தெரியாது ஆனால் கண்டுபிடிக்க மட்டும் தெரியும் என்று கேட்பது எனக்கு விளங்குது. என்ன செய்ய ? காலம் அப்படி. தொலைபேசி பாவனையால் வெளிவரும் ஒரு வித கதிர்ப்பு (radiation) அதன் அழிவுக்கு காரணம் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு வலைதளத்தில் (blog) நான் படித்தது ஞாபகம் வந்தது , "நான் எல்லா இடத்திலும் கண்டதை விட அமெரிக்காவில் (America) அதிக சிட்டுக்குருவிகளை கண்டேன் " என்று அந்த பதிவின் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். அப்படி என்றால் நாகரீக மோகம் மிக்க அந்த நாட்டில் மட்டும் எப்படி இவை இருக்கும். அங்கு இந்த radiation எல்லாம் இல்லையோ? இனங்கள் அழிவதற்கு நாங்கள் தான் காரணம் அதுவும் குறிப்பாக இந்த இனம் அழிவதற்கு எமது நாகரீக வளர்ச்சியும் எமது அலட்சிய போக்கே காரணமாகும்.  முற்றும்......   


அன்புடன் ,
 நான் சிற்பி

Tuesday, November 22, 2011

இவ்வருடத்தின் மோசமான கடவுச் சொற்கள்: உங்களுடையதும் உள்ளதா?

இவ்வருடத்தின் மோசமான கடவுச்சொற்களைப் பிரபல நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது.

கடவுச்சொற்களை முகாமைத்துவம் செய்யும் அப்ளிகேஷனை உருவாக்கும் நிறுவனமொன்றே இவற்றை வெளியிட்டுள்ளது.

பரந்த ஆய்வொன்றின் அடிப்படையிலேயே குறித்த நிறுவனம் இவ் அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளது.

அதன்படி அதிகமாக ஹெக்கிங் செய்யப்பட்ட கடவுச் சொற்கள் இதோ.

1. password

2. 123456

3. 12345678

4. qwerty

5. abc123

6. monkey

7. 1234567

8. letmein

9. trustno1

10. dragon

11. baseball

12. 111111

13. iloveyou

14. master

15. sunshine

16. ashley

17. bailey

18. passw0rd

19. shadow

20. 123123

21. 654321

22. superman

23. qazwsx

24. michael

25. football

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கடவுச்சொற்களின் முக்கியத்துவம் குறித்து அதிகமாக வலியுறுத்தப்படுகின்ற போதிலும் பலர் அதுதொடர்பில் அக்கறை கொள்வதில்லையென அவர் தெரிவிக்கின்றார்.

இதன் மூலம் அவர்கள் மட்டுமன்றி அவர்களது நண்பர்களும், உறவினர்களும் பாதிக்கப்படுகின்றனர், உதாரணமாக உங்கள் மின்னஞ்சல் கணக்கு அல்லது சமூக வலையமைப்புகளில் வேறு ஒருவர் நுழைந்து அவசரமாக பணம் அனுப்பும் படியும் அவசரத்தில் இருப்பதாகவும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கோரினால் அவர்களும் பணம் அனுப்பத்தயங்குவதில்லை.

இத்தகைய சந்தர்ப்பத்தில் உங்களுடன் சேர்த்து அவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தான் கடவுச் சொல்லை உறுதியானதாக அதாவது எண்கள், எழுத்துக்கள் மற்றும் இதர குறியீடுகளின் கலவையாக உருவாக்கும்படியும் அதனை 6 மாதத்திற்கு ஒரு தடவை மாற்றும் படியும் வலியுறுத்தப்படுகின்றது.    
 



நன்றி-வீரகேசரி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers